Sunday, December 14, 2014

ஆளுநர் Dr. . பத்மநாபன் IAS
அகவை 87 வாழ்த்துப்பா!
14.12.2014

அண்ணல் அம்பேத்கரை நேரில் சந்தித்து நல்லாசிகள் பெற்றவர்
அம்பேத்கர் அகடமியின் நிறுவனர் ஆளுநர் Dr. .பத்மநாபன் IAS.,
அண்ணாநகரில் அரங்கம் அமைத்து அழியாப் புகழ் பெற்றவர்
அகவை 87, 14.12.2014-ல், வணங்கி வாழ்த்துகிறோம் Dr. . பத்மநாபன் வாழ்க!

ஆசிரியர் ஆனந்தம் அன்னை ஆதிலட்சுமி பெற்றத் திருமகன்
ஆற்காடு அருகிலுள்ள பிஞ்சியில் 14.12.1928-ல் பிறந்தவர்
ஆளுநராகி மிசோ மொழியில் திருக்குறளை பதிப்பித்தவர்
ஆதி பழங்குடி மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் நீடூழி வாழ்க!

இல்வாழ்க்கைத் துணையாக சீத்தாவை மணம் முடித்தவர்
இனிய மக்கள் இரவிசங்கர் சாந்தி ஆனந்தகுமாரை பெற்றவர்,
இல்லறத்தை நல்லறமாக்கி தம்மக்களை உயர்வாழ்வு வாழவைத்தவர்
இராணிப்பேட்டை பிஞ்சிக்கே பெருமை சேர்த்த பெருமகனார் வாழ்க!

ஈடிலா கல்விகற்று ஐ..எஸ். அதிகாரியாக உயர்ந்தவர்,
ஈட்டியோடு நாடோடிகளாக உலவிய நரிக்குறவர்களுக்கு நல்வாழ்வளித்தவர்
ஈன்ற பொழுதின் பெற்றோர் பெரிதுவக்க வாழ்ந்த பெருமகனார்
ஈரடி குறளாய் அன்னை சீத்தாவோடு வளமோடும் நலமோடும் நீடூழி வாழ்க!

உழுதுண்டு வாழும் உழவர்க்கே நிலங்களை உரிமையாக்கினார்
உழைக்கும் தொழிலாளர்க்கு ஊதியங்களை உயர்த்தி வழங்கினார்
உலகம் சுற்றும் உல்லாசிகளுக்கு சுற்றுலா தலங்களை உருவாக்கினார்
உத்தமர் காமராஜ் திட்டங்களுக்கு உறுதுணையாய் நின்ற ஆட்சியர் வாழ்க!

ஊர் சுற்றும் பறவைகட்கு வேடந்தாங்கலை சரணாலயமாக்கினார்,
ஊர்வேறு சேரிவேறு என்பதை மாற்றி சமத்துவபுரமாக்கினார்,
ஊட்டியை சீராக்கி ஊர்மக்கள் போற்றிட வேலை வாய்ப்புகள் தந்தார்,
ஊழையும் உப்பக்கம் கண்டுயர்ந்த உத்தமர் பத்மநாபன் வாழ்க!

எம்.ஜி.ஆர். ஆட்சியில் முதன்மை செயலராகி தமிழ்நாட்டை ஒளிரச் செய்தார்
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்றே கர்ணம் பதவியை VAO ஆக்கினார்.
எங்கோ ஓடிஒளிந்த ஜெயேந்திரரை கண்டுபிடித்து காஞ்சி மடத்தில் சேர்த்தார்
எங்களினப் பெருமையை எட்டுதிக்கும் பரப்பிய அப்பா ஆ. பத்மநாபன் வாழ்க!

ஏழைஎளியோர்கள் வாழ்வில் உயர்ந்திட பஸ் முதலாளிகளாக ஆக்கினார்
ஏனென்று கேட்க நாதியற்றோருக்கு கக்கன்ஜி துணையோடு குடிசைகள் அமைத்துத் தந்தார்!
ஏழையர் குடிசைகளில் மின்னொளி பரவிட மின்இணைப்புகள் வழங்கச் செய்தார்
ஏற்காட்டை 'டவுன்சிப்'பாக மாற்றி ஏற்றம் தந்த ஏந்தல் பத்மநாபன் IAS வாழ்க!

ஐஏஎஸ் தேர்வில் ஒதுக்கீடின்றி தன்னறிவாற்றலால் முத்திரை பதித்தவர்
ஐயர்முதல் அனைத்து சாதியினரும் மதித்திடும் தகுதி மிக்கவர்!
ஐம்பெருங் காப்பியங்கள் அனைத்தும் கற்றுத் தேர்ந்தவர்!
ஐம்புலனடக்கி வாழும் ஆற்றல் பெற்ற டாக்டர் ஆ.பத்மநாபன் IAS வாழ்க!

ஒகனேகல் நீர்வீழ்ச்சியாக காட்டாற்று வெள்ளத்தை கட்டுப்படுத்தியவர்!
ஒன்றுசேர் கற்பி போராடு என்ற தத்துவத்தை மனதில் பதித்தவர்!
ஒருதாய் மக்கள் நாமென்று கூறி ஒருமைப்பாட்டை வலியுறுத்துபவர்!
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுயர ஆங்கில கவிதைகள் படைக்கும் Dr. . பத்மநாபன் வாழ்க!

ஓலை குடிசைகளை அன்னை சத்தியவாணிமுத்து துணையோடு கான்கிரீட் வீடுகளாக்கினார்
ஓசையின்றி மக்கள் பணியாற்றிட மக்கள் கல்விக் கழகம் நிறுவினார்!
ஓடம்போல், ஏணிபோல் பலரை அக்கரை சேர்த்தார், உயர வைத்தார்!?
ஓய்வு காலத்தில் ஓயாமல் உழைத்திடும் உழைப்புச் செம்மல் பத்மநாபன் வாழ்க!

ஔவியம் அற்றவர் பன்மொழி அறிஞர் Dr. .பத்மநாபன் IAS.
ஔதாரியம் மிக்கவர் எங்கள் உலக கவிஞர் பேரவையின் ஒப்பிலா தலைவர்,
ஔடதம் போன்றவர் தலித்இன மக்களின் நல்வாழ்வுக்கு!
ஒளவைபோல் உலகு உள்ளளவும் Dr. . பத்மநாபன் புகழோடு வாழ்க! வாழ்க!

ஜெய்பீம்! ஜெய்புத்தம்!!


அன்புடன்:
.ஜோதி, பா.தனசேகர், து.மங்களகெளரி,
Er. செ.கஜேந்திரன், M.E. 'மெரின்' S.சுந்தர்ராஜ்


இணையதளத்தில் காணவும்                                    blogspot:   http:\\jaibeem.blogspot.com                         தமிழ்மறையான்
Facebook: Thamizhmaraiyaan Gpr              கடவுள் அம்பேத்கர் அறக்கோயில்
Email:         thamizhmaraiyaan@gmail.com                            அசோகர்நகர், சென்னை-83.
                                                        24745637 / 24890347
------------------------------------------------------------------------------------------
இரா. புகழரசி அறிவழகன், பக்தி கணினி - 24890347 Email: bakthi15552@yahoo.com


No comments:

Post a Comment